முகப்புபாலிவுட்

அக்‌ஷய் குமாரின் அந்த இடத்தில் எட்டி உதைத்த நடிகை.!! வைராகும் வீடியோ..!

  | April 21, 2020 09:26 IST
Akshay Kumar

இந்த வீடியோ 'மிஷன் மங்கள்' படப்பிடிப்பில் இருக்கும் போதே எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை வித்யா பாலன் இந்திய சினிமாவில் மிகவும் சோதனைக்குரிய கதாநாயகிகளில் ஒருவராக தனக்கென ஒரு முக்கிய இடத்தை செதுக்கியுள்ளார். அவர் கடந்த ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று செம வைரலாகிவருகிறது. 

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த வீடியோவில் அக்‌ஷய் குமாருடனான ஒரு போலியான கைகலப்பு சண்டையில், அவரின் அடி வயிற்றிலேயே தன் காலால் அடித்துவிட்டு, பெரியதாக ஏதோ சாதித்ததைப் போல வெற்றி சைகையில் கைகளை உயர்த்திக் காட்டுகிறார் வித்யா பாலன்.

ஜெகன் சக்தி இயக்கத்தில் 'மிஷன் மங்கள்' திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், தப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோர் இணைந்து நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்த வீடியோவும் இப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போதே எடுக்கப்பட்டுள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com