முகப்புபாலிவுட்

பாலிவுட்டில் அமீர்கானுடன் நடிக்கும் விஜய்சேதுபதி!

  | August 21, 2019 11:46 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார்
  • முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் இவர்
  • இந்த படத்தில் அமீர்கானின் நண்பனாக நடிக்கவிருக்கிறார் இவர்
பாலிவுட்டில் அமீர்கானுடன் விஜய்சேதுபதி சேர்ந்து நடிப்பதா செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட் திரைப்படமான ‘பாரஸ்ட் கம்ப்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விருது பெறும் விழாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற விஜய்சேதுபதி அமீர்கானுடன் சேர்ந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்தார். ஆனால் அது என்ன படம் என்பது பற்றி அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

தற்போது ‘பாரஸ் கம்ப்' இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா' படத்தில் தான் அமீர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. ‘பாரஸ்ட் கம்ப்' படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார். அவர் இறந்த பின், கம்ப் தனது வியாபாரத்தின் லாபத்தை பப்பாவின் அம்மாவுக்குத் தருவார்.
இந்தி ரீமேக்கில் இந்த பப்பா கதாபாத்திரம் ஒரு கருப்பின நடிகர் நடித்திருந்தார். இந்தியில் தமிழராக சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்