முகப்புபாலிவுட்

திரைப்படத்தில் நடிக்கிறாரா விராட் கோலி?

  | September 21, 2018 17:07 IST
Trailer The Movie

துனுக்குகள்

 • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி
 • இவர் கடந்த ஆண்டு அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்
 • இப்போஸ்டரில் விராட் கோலி சூப்பர் ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் கடந்த ஆண்டு (2017) பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது, விராட் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இப்போஸ்டரில் விராட் கோலி சூப்பர் ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. ‘டிரெய்லர் – தி மூவி’ என இதற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Another debut after 10 years, can't wait! #TrailerTheMovie www.trailerthemovie.com

A post shared by Virat Kohli (@virat.kohli) on


‘Wrogn புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதனை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது விராட் கோலி நடிக்கும் திரைப்படமா அல்லது விளம்பரப்படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com