முகப்புபாலிவுட்

ஷாருக்கான் – சல்மான் கான் இணைந்து நடனமாடியுள்ள ‘ஜீரோ’ பட பாடலின் வீடியோ

  | December 04, 2018 15:26 IST
Zero

ஷாருக்கான் – சல்மான் கான் இணைந்து நடனமாடியுள்ள ‘Issaqbaazi’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் ‘JAB HARRY MET SEJAL' படத்திற்கு பிறகு ‘பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், ஆனந்த்.எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ' படத்தில் நடித்துள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் அபய் தியோல் நடித்துள்ளாராம். ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் – COLOUR YELLOW புரொடக்ஷன்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது

ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள இந்த படத்தில் சல்மான் கான், மாதவன், ஜிம்மி ஷெர்கில், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஸ்மா கபூர், ஜுஹி சாவ்லா, மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் கெஸ்ட் ரோலில் வலம் வரவுள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர், சிங்கிள் டிராக் மற்றும் 3 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 


அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஷாருக்கான் – சல்மான் கான் இணைந்து நடனமாடியுள்ள ‘Issaqbaazi' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்