முகப்புஹாலிவுட்

இன்று பிந்தைய தயாரிப்பு பணிகளைத் தொடங்கும் 21 தமிழ் படங்கள்!!

  | May 12, 2020 14:15 IST
Films

இந்த போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளில் டப்பிங், எடிட்டிங், கம்பியூட்டர் கிராஃபிக்ஸ், ரீ ரெக்கார்டிங் ஆகிய பணிகள் அடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால், படப்பிடிப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் மார்ச் 19 முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், நேற்று முதல் அரசாங்கம் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவுக்காக காத்திருந்த பல படக்குழுவினர், உடனடியாக வேலையை தொடங்கியுள்ளன. சினிமா பணிகள் 52 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FEFSI-ன் அறிக்கையின்படி நேற்று, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2', த்ரிஷாவின் ‘ராங்கி', விஷாலின் ‘சக்ரா', வெள்ளை யானை மற்றும் தர்பராஜ் ஃபிலிம்ஸின் ‘ப்ரொடக்‌ஷன் no-1' ஆகிய படங்களின் பணிகள் தொடங்கப்பட்டன.

அதே போல், இன்று விஜயின் ‘மாஸ்டர் திரைப்படம், வெப் சீரீஸ் மற்றும் தொலைக்காட்சி சீரியல் உட்பட 21 தயாரிப்புகள் இன்று பிந்தைய தயாரிப்பு பணிகளைத் துவங்குகிறது.

அவை, சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் ‘டாக்டர்', டீ கடை டாக்கீஸின் ‘சின்னதா ஒரு படம்', விஜயின் ‘மாஸ்டர்', கிரியேட்டிவ் எண்டர்ப்ரைஸஸ் டிஸ்ட்ரிபூட்டர்ஸின் ‘கபடதாரி, ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் ‘பெண் குயின்', சுவர் ஷாட் ஸ்டூடியோஸின் ‘பேய் மாமா', காட் பிக்சர்ஸின் ‘கும்கி-2', க்ரிஸ்ட் பி எண்டர்பிரைஸஸின் ‘பாதாம் கீர்', பவர் இங் ஸ்டூடியோஸின் ‘IPC376', மீனாக்ஷி சினிமாஸின் ‘ப்ரொடக்‌ஷன் நம்பர்:1' (Web Series), மெறோ ப்ரொடக்‌ஷ்ன்ஸின் ‘ராபர்', ட்ரை கலர்ஸின் ‘மாங்கல்ய தோஷம்' (சீரியல்), அய்யனார் ஃபிலிம்ஸின் ‘சூர்ப்பணகை', வால் வாச்சர் ஃபிலிம்ஸின் ‘சுழல்' (web series), ஐ & எம் ஸ்டூடியோஸின் ‘ப்ரொடக்‌ஷன் நெ:1', டார்க் ரூம் கிரியேஷன்ஸின் ‘2nd show', ச்டோன் பென்சின் வலைதள தொடர், ஹோம் மூவி மேக்கிங்கின் ‘பூமி', திருச்சிற்றம் நிறுவனத்தின் ‘கசச தபற' மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலின் ‘மூக்குத்தி அம்மன்' ஆகிய தயாரிப்புகளில் வேலைகள் இன்று துவங்கப்பட்டுள்ளன.

இந்த போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளில் டப்பிங், எடிட்டிங், கம்பியூட்டர் கிராஃபிக்ஸ், ரீ ரெக்கார்டிங் ஆகிய பணிகள் அடங்கும். மேலும், இப்பணிகளில் ஈடுபடுபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், முகக் கவசம் அணியவேண்டும், ஸ்டூடியோக்களைப் பயன்படுத்தும் முன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும், 5 பேர்களுக்கு மேல் ஒரே இடத்தின் வேலை செய்யக்கூடாது என பல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com