முகப்புஹாலிவுட்

'உங்கள் ஆதரவுக்கு நன்றி' - 'அவதார் 2' படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த ஜேம்ஸ் கேமரூன்..!!

  | July 24, 2020 15:35 IST
James Cameron

துனுக்குகள்

 • ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் அவதார் திரைப்படம் உலக அளவில் பெரிய
 • குழு உறுப்பினர்களுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் படப்பிடிப்பை மீண்டும்
 • 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் படத்தினுடைய அனைத்து பணிகளும்
பொதுவாகவே தமிழ் மொழி மட்டும் இன்றி பிற மொழி படங்களுக்கும், அப்படத்தின் கலைஞர்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதில் தமிழ் மக்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. இந்நிலையில் பல சிறந்த படங்களை நமக்கு கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் அவதார் திரைப்படம் உலக அளவில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உறுதியானது. 

அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா என்னும் அரக்கணக்கால் அப்படைப்பிடிப்பு தடைப்பட்டது. ஆனால் நிலைமையை சமாளித்து இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், 50-க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நியூசிலாந்த்தை சென்று அடைந்து அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். 

2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் படத்தினுடைய அனைத்து பணிகளும் முடிவடையும் என்று அப்போது படக்குழு அறிவித்த நிலையில் தற்போது அப்படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஜேம்ஸ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். "மக்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி, தற்போது உலகம் முழுவதும் நிலவும் இந்த அசாதாரண சூழல் தற்போது படப்பிடிப்பை முடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
ஆனால் விரைவில் மக்களின் பார்வைக்கு இப்படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்". மேலும் படக்குழு ஏற்கனவே குறிப்பிட்டதை போல அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த படத்தை நிறைவு செய்வது கடினம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com