முகப்புஹாலிவுட்

கொரோனா பாதித்த பிரபல நடிகர் டாம் ஹாங்க்ஸ் - நலம்பெற்று வீடு திரும்பினார்

  | March 18, 2020 10:02 IST
Tom Hank

துனுக்குகள்

  • தற்போது பூரண குணமடைந்துவிட்டதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • என்று மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
  • ஆஸ்திரேலியா அருகே கோல்டன் கோஸ்ட்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாம் தற்போது பூரண குணமடைந்துவிட்டதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவருடைய மனைவி மேலும் சிறிது நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆஸ்திரேலியா அருகே கோல்டன் கோஸ்ட் என்ற இடத்தில் பாஸ் லுஹர்மான் என்பவர் இயக்கும் 'எல்விஸ் பிரெஸ்லியின்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வந்த நடிகர் டாம் மற்றும் அவரது மனைவி வில்சன் ஆகியோருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

பாடகர் மற்றும் பாடலாசிரியரான வில்சன், COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்வதற்கு முன்பு சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில்  ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவர்கள் இருவரும் சென்ற இடங்களை தற்போது ஆய்வுசெய்து வருகின்றனர். 
ஆஸ்திரேலியாவில் தற்போது வரை சுமார் 400 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்