முகப்புஹாலிவுட்

'அவதார்' ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அலிடா: பேட்டல் ஏஞ்சல்' டிரெய்லர்

  | July 24, 2018 14:33 IST
Alita: Battle Angel

துனுக்குகள்

 • ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் `அலிடா: பேட்டல் ஏஞ்சல்'
 • ராபர்ட் ரோட்ரிக்யூஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
 • ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது
யுகிடோ கிஷிரோ எழுதிய 'அலிடா: பேட்டல் ஏஞ்சல்' என்கிற காமிக்ஸை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்யூஸ். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியதோடு ஜான் லண்டாவுடன் இணைந்த தயாரிக்கவும் செய்திருக்கிறார் `அவதார்' பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் புதிய டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி போன்ற படங்களை இயக்கிய ராபர்ட் இப்படத்தை இயக்கியிருப்பதால் படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
 

'அவதார்' படத்தின் அடுத்த பாகங்களில் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் பிசியாகி இருப்பதால் படத்தின் வெளியீட்டில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 21ம் தேதி இப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. சைன்ஸ்ஃபிக்ஷன் ஜானரின் ஒரு வகையான சைபர்பங்க் படமாக உருவாகியிருக்கும், 'அலிடா' ஐமாக்ஸ் மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com