முகப்புஹாலிவுட்

சர்வதேச திரைப்படத்தை தயாரித்து இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்..!

  | June 12, 2020 19:49 IST
Ar Rahman

துனுக்குகள்

 • இப்படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.
 • இப்படத்தை வங்கதேச இயக்குநர் மொஸ்தஃபா சர்வார் ஃபரூக்கி இயக்குகிறார்.
 • முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் மேகன் மிட்செல் நடிக்கிறார்.

‘ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர். ரஹ்மான் கடைசியாக விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார், இப்போது மணிரத்னம் இயக்கிவரும் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா' போன்ற பல  படங்களில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு '99 songs' என்ற படத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த ஏ.ஆர். ரஹ்மான், அடுத்ததாக ஒரு சர்வதேச திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகிறார்.

‘நோ லேண்ட்ஸ் மேன்' எனும் சர்வதேச படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், அப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளார்.

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘நோ லேண்ட்ஸ் மேன்' திரைப்படத்தை பிரபல வங்கதேச இயக்குநர் மொஸ்தஃபா சர்வார் ஃபரூக்கி இயக்குகிறார். அமெரிக்காவில் ஒரு தெற்காசிய ஆணுக்கும் ஆஸ்திரேலிய பெண்ணுக்கும் இடையில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதையாக ‘நோ லேண்ட்ஸ் மேன்' அமைந்துள்ளது. இப்படத்தில் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் மேகன் மிட்செல் நடிக்கிறார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com