முகப்புஹாலிவுட்

ஏ.ஆர்.ரகுமான் – ஏ.ஆர்.முருகதாஸ் இடம்பெறும் 'எண்ட் கேம்' ஹாலிவுட் திரைப்படம்

  | March 26, 2019 10:33 IST
Ar Rahman Marvel Anthem

துனுக்குகள்

  • ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு ஆந்தென் அமைத்திருக்கிறார்
  • ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்திற்கு வசனங்கள் எழுதப்போகிறார்
  • இப்படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது
உலக நாடுகள் வரை வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே தமிழ் நாட்டில் தனி வரவேற்பு உண்டு. ஹாலிவுட் படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படங்களுக்கு இங்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்காது.

`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸி'ன் கடைசி படமாக 'எண்ட் கேம்' உருவாகி இருக்கிறது. `மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸ்' எனப்படும் திரைப்படத் தொடரின் மிக முக்கியமான திரைப்படம் இது. அண்மையில் வெளியான `கேப்டன் மார்வெல்' உட்பட இதுவரை திரைக்கு வந்துள்ள 21 திரைப்படங்களின் இறுதிக்கட்டம் இந்தப் படம். அதனாலேயே இதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. மற்ற படங்களின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், கடந்த ஆண்டு வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் நேரடித் தொடர்ச்சியாகவும் இந்தப் படம் இருக்கும்.

இதற்கான தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கான வசனங்களை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான் எழுதப்போகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவிலிருக்கும் மார்வெல் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. `எண்ட் கேம்' பட ரிலீஸை ஒட்டி இந்தியாவின் மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் மார்வெல் ஆந்தெம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என மார்வெல் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. வருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த மார்வெல் ஆந்தெம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்