முகப்புஹாலிவுட்

அவெஞ்சர்ஸ் இயக்குநர் விரும்பும் இந்திய ஹீரோ யார் தெரியுமா?

  | April 03, 2019 13:31 IST
Avengers Endgame

துனுக்குகள்

 • அவென்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாக இருக்கிறது
 • இந்த படத்தின் இயக்குநரான ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்தார்
 • பாலிவுட் நடிகர் சல்மான் கான் பற்றி தெரியும் என்று சொன்னார் அவர்
கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், தோர்,  ஸ்பைடர்-மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ். இம்மாரியான படங்களுக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டன.

இதையடுத்து அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவென்சர்ஸ் எண்ட் கேம். இதற்கு முந்தைய பாகத்தில் ஒரு சொடக்கில், உலகில் இருந்த பாதி உயிர்களை தானோஸ் அழிப்பதோடு கதை முடிந்தது.

இப்படத்தை இந்தியாவில் விளம்பரப்படுத்துவதற்காக இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்துள்ளார். அவெஞ்சர்ஸ் படம் குறித்து பேசிய இயக்குநர் ஜோ ரஸ்ஸோ, ‘எனக்கு ஆக்ஷன் படங்கள் என்றால் பிடிக்கும். பாலிவுட் நடிகர் சல்மான் கான் பற்றி தெரியும்.. சல்மான் கானின் தபாங் மற்றும் தபாங் 2 படங்களை பல முறை பார்த்துள்ளேன். படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது' என்று கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com