முகப்புஹாலிவுட்

இணையதளத்தில் வெளியாகியது 'பிகில்' மற்றும் 'கைதி' திரைப்படங்கள்! அதிர்ச்சியில் படக்குழு

  | October 26, 2019 13:19 IST
Bigil

துனுக்குகள்

  • தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இப்படங்கள் வெளியாகி இருக்கிறது
  • இப்படங்கள் நேற்று வெளியாகு ஓடிக்கொண்டிருக்கிறது
  • படங்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது
சட்ட விரோத இணையதளங்களில் பிகில், கைதி படங்கள் வெளியிட தடை வழங்கப்பட்ட நிலையில் இணையத்தில் இரண்டு படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏறபடுத்தியிருக்கிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் - நயந்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிகில். இப்படத்தில் யோகி பாபு, விவேக், இன்னுன் பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதே போல் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கைதி" படமும் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 இந்நிலையில் இந்தப் படங்கள் 'தமிழ் ராக்கர்ஸ்' இணைய தளத்தில்  இரண்டு படங்களும் வெளியாகி, படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திரைத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
இப்படங்களை சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட கூடாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இப்படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்