முகப்புஹாலிவுட்

சமீபத்தில் வெளியான கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா…?

  | March 11, 2019 18:12 IST
Captain Marvel

துனுக்குகள்

  • கடந்த மார்ச் 8 அன்று இப்படம் வெளியானது
  • 25 மொழிகளில் இப்படம் வெளியானது
  • இந்தியாவில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
கேப்டன் மார்வெல் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளி அன்று வெளியானது. மார்ச் 8 உழைக்கும் மகிளிர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான இப்படம்,  பெண்ணை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப்பட்ட கதை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு.
 
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதுமே அனைத்து ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கும். அதே போல் இந்த படமும் உலக மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 78 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 கோடிக்கும் மேல். இந்த படம் சுமார் 25 மொழிகளில் வெளியாகியுள்ளது. சீனாவில் மட்டும் 34 மில்லியன்கள் வெளியான அன்று ஒரு நாளிலேயே சம்பாதித்திருக்கிறதாம். இந்தியாவில் 15 கோடி வரை சம்பாதித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. மார்வல் நிறுவனத்தில் வெளியான படத்தில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்திற்கு அடுத்து முதல் நாளே மிகப்பரிய ஓப்பனிங்கில் ரிலீஸான படம் இதுதான் என்பது குறிப்பிடதக்கது.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்