முகப்புஹாலிவுட்

கிறிஸ்டோபர் நோலனின் TENET - திரையரங்கில் கண்டுகளித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்..!

  | August 28, 2020 08:06 IST
Christopher Nolan

துனுக்குகள்

  • அவரது அடுத்த படமாக ‘டெனெட்' கடந்த சில நாட்களுக்கு முன்பு
  • இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி
  • இந்த படத்தை திரையரங்கில் கண்டுகளித்ததை தனது ட்விட்டர்
மெமெண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், இன்டெஸ்டெல்லார் போன்ற படங்களுக்காக உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் தான் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமாக ‘டெனெட்' கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது என்றால் அது மிகையல்ல. இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் கடந்த மே மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் காலப் பயனத்தைக் குறித்தது அல்ல, ஆனால் காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார். மேலும், மார்டின் டொனோவேன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென்னத் பிரனாக், டிம்பிள் கபாடியா மற்றும் மைக்கேல் கைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

TENET ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு முறை தேதி மாற்றப்பட்டு, கடைசியாக ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் இந்த படத்தை திரையரங்கில் கண்டுகளித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com