முகப்புஹாலிவுட்

காலவரையின்றி ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட TENET..!

  | July 21, 2020 15:07 IST
Tenet

இம்மாத தொடக்கத்தில் இப்படத்தின் 2 புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெமெண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், இன்டெஸ்டெல்லார் போன்ற படங்களுக்காக உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமாக ‘டெனெட்' வெளியாக தயாரகிவருகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் கடந்த மே 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் காலப் பயனத்தைக் குறித்தது அல்ல, ஆனால் காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார். மேலும், மார்டின் டொனோவேன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென்னத் பிரனாக், டிம்பிள் கபாடியா மற்றும் மைக்கேல் கைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

TENET ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு முறை தேதி மாற்றப்பட்டு, காசியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டது.

ஆனால், இப்போது படக்குழு அதை வெளியிடுவதிலிருந்து முற்றிலுமாக காலண்டரிலிருந்து நீக்கியுள்ளது. அதாவது ‘TENET' படத்தின் ரிலீஸ் தேதியை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் இப்படத்தின் 2 புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com