முகப்புஹாலிவுட்

‘வொண்டர் வுமன்1984’ & ‘டெனெட்’ ரிலீஸ் தேதியை மாற்றிய Warner Bros.

  | June 13, 2020 22:19 IST
Tenet

‘TENET’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வொண்டர்வுமன் 1984' மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்' ஆகிய திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிகி, ஆரோன் டெய்லர் ஜான்சன், டிம்பிள் கபாடியா மற்றும் கென்னத் பிரானாக் ஆகியோர் நடித்த உளவு திரில்லர் திரைப்படமான் ‘TENET' ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெளியீடு இரண்டு வாரங்களுக்கு தள்ளி ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸின் தயாரிப்பாகும்.

மேலும், வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸின் மற்றொரு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘வொண்டர் வுமன்1984' மீண்டும் வெளியீட்டு தேதி மாற்ரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய இப்படம், பின்னர் ஆகஸ்ட் 14 வெளியாக திட்டமிடப்பட்டது, ஆனால் இப்போது அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com