முகப்புஹாலிவுட்

கிறிஸ்டோபர் நோலனின் ‘TENET’ 2-வது முறையாக ரிலீஸ் ஒத்திவைப்பு.!

  | June 26, 2020 12:28 IST
Christopher Nolan

காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மெமெண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், இன்டெஸ்டெல்லார் போன்ற படங்களுக்காக உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமாக ‘டெனெட்' வெளியாக தயாரகிவருகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் கடந்த மே 22-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் காலப் பயனத்தைக் குறித்தது அல்ல, ஆனால் காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார். மேலும், மார்டின் டொனோவேன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென்னத் பிரனாக், டிம்பிள் கபாடியா மற்றும் மைக்கேல் கைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

TENET ஆரம்பத்தில் ஜூலை 17 வெளியீடாக அறிவிக்கப்பட்டது, பிறகு இரண்டு வாரங்களுக்கு தள்ளிபோடப்பட்டு ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்தும் காரணத்தினால், இப்படத்தின் தயாரிப்பி நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோஸ், மீண்டும் வெளியீட்டு தேதியை மேலும் 2 வாரங்கள் ஒத்திவைத்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com