முகப்புஹாலிவுட்

காலத்தை பின்னோக்கி தள்ளும் கிறிஸ்டோபர் நோலன்!! வைரலாகும் TENET ட்ரைலர்.!

  | May 22, 2020 21:04 IST
Christopher Nolan

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார்.

மெமெண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், இன்டெஸ்டெல்லார் போன்ற படங்களுக்காக உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமாக ‘டெனெட்' வெளியாக தயாரகிவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் மீறி ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதன் புதிய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படம் காலப் பயனத்தைக் குறித்தது அல்ல, ஆனால் காலத்தை பின்னோக்கி செயல்படுத்தும் அறிவியல் ரீதியான புதிய யோசனையுடன் இயக்குநர் நோலன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த டரைலர் தற்போது உலக அளவில் வைரலாகிவருகிறது. 

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில், கால நேரத்தை கையாளும் சக்தி கொண்டவராக ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்துள்ளார். மேலும், மார்டின் டொனோவேன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென்னத் பிரனாக், டிம்பிள் கபாடியா மற்றும் மைக்கேல் கைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜூலை 17-ஆம் தேதவெளியிடத் திட்டமிடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பால் உலகம் இருக்கும் நிலையில், அதே தேதியில் வெளியிடுவதில் சிக்கல் உள்ளது என்றாலும், வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோஸ் அதை திரையரங்குகளுக்குக் கொண்டுவருவதற்கான அவர்களின் முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com