முகப்புஹாலிவுட்

"விரைவில் மீண்டு வருவோம்" - உலகப் புகழ்பெற்ற நடிகருக்கு கொரோனா..!

  | September 03, 2020 11:35 IST
The Rock

துனுக்குகள்

 • ஆரம்ப காலத்தில் கால்பந்தாட்டம் மற்றும் ராக்பி போன்ற விளையாட்டுகளில்
 • அதன் பிறகு 2001 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்' படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை
 • தற்போது உலக அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் இவர் தான் என்பது
உலக அளவில் பல லட்சம் மக்கள் பரவி வரும் கொடிய கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் வுஹான் நகரை பிறப்பிடமாக கொண்ட இது இன்று பூமி பந்தில் உள்ள 95 சதவிகித நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் The Rock என்ற ரசிகர்கள் அன்போடு அழைக்கும் பிரபல நடிகர் டுவைன் ஜான்சன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். ஜான்சன் 1972ம் ஆண்டு கலிபோர்னியா நகரில் பிறந்தவர். 

ஆரம்ப காலத்தில் கால்பந்தாட்டம் மற்றும் ராக்பி போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய அவர் பின்னர் WWF என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். 90s கிட்ஸ்களின் கனவு நாயகன் இவர் என்றால் அது மிகையல்ல. மிக பெரிய மல்யுத்த வீரராக திகழ்ந்த இவர் அதில் இருந்து ஓய்வு பெற்றார் ஆனால் அதன் பிறகு திரைத்துறையில் களமிறங்கினர். 1999ம் ஆண்டு வெளியான Beyond the Mat என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாகினர்.
 
அதன் பிறகு 2001 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்' படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு Fast அண்ட் Furious, ஜுமான்ஜி, Rampage போன்ற பல படங்கள் இவருடைய அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக கலைக்கட்டியது. தற்போது உலக அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் இவர் தான் என்பது ஒரு தகவல். இந்நிலையில் கொரோனா தொற்று தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் தங்கள் அனைவரும் நலமுடன் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com