முகப்புஹாலிவுட்

25-வது ஜேம்ஸ் பாண்ட் படம்; அசரடிக்கும் ‘No Time To Die’ புதிய டிரெய்லர்.!

  | September 03, 2020 20:45 IST
No Time To Die Trailer

நவம்பர் - 12ம் தேதி லண்டனிலும் நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவிலும் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் ட்ரைலர் 6 மாதங்களுக்கு மும்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருந்த இந்த திரைப்படம், கொரோனா காரணமாக நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் கடந்த மார்ச் மாதம் வெளியானது. 

இரு தினங்களுக்கு ‘NO TIME TO DIE' அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் - 12ம் தேதி லண்டனிலும் நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவிலும் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், டேனியல் கிரெய்கின் புதிய போஸ்டரை வெளியிட்டதுடன், இன்று டிரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவித்தபடி, “நோ டைம் டு டை” - சூப்பர்-ஸ்பை த்ரில்லரின் 25-வது படத்தின் புதிய டிரெய்லர் இன்று  ட்விட்டர் வழியாக வெளியிடப்பட்டது. இரண்டரை நிமிடம் கொண்ட இந்த இரண்டாவது டிரெய்லர் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் டேனியல் கிரெய்கின் உலகளாவிய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஒரு உலகளாவிய தொற்றுநோயால் கூட ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வருகையை தடுக்க முடியாது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com