முகப்புஹாலிவுட்

தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

  | September 12, 2018 18:12 IST
Dhanush

துனுக்குகள்

  • தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் 'ஃபக்கிர்'
  • கென் ஸ்காட் இப்படத்தை இயக்கியுள்ளார்
  • பல சர்வதேச விழாக்களுக்கு சென்றுள்ளது படம்
கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் சினிமாவில் தனுஷ் அடி எடுத்து வைத்திருக்கும் படம் `தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்'. கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இப்படம் பல சர்வதேச திரைவிழாக்களுக்கும் சென்று வந்துள்ளது. மும்பை, ஃப்ரான்ஸ், இத்தாலி, லிபியா எனப் பல பகுதிகளில் இப்படம் பமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நார்வே திரைவிழாவிலும் கலந்து கொண்டது இப்படம். இதில் `தி ரே ஆஃப் சன்ஷைன்' என்கிற விருதைப் பெற்றுள்ளது. "மனிதம் பற்றி பேசும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் நடுவர்களைக் கவர்ந்துள்ளது" என இந்த விருது கிடைத்ததைப் பற்றி கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
 
ஆங்கிலம் மற்றும் ஃப்ரென்ச் மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், தமிழில் `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. தனுஷின் `வடசென்னை' வெளியீட்டுக்குப் பின் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்