முகப்புஹாலிவுட்

தனுஷ் நாயகனாக நடித்த ஆங்கில படத்துக்கு விருது..! ஹாலிவுட்டிலும் கொடி ஏற்றும் தனுஷ்

  | May 04, 2019 12:12 IST
The Extraordinary Journey Of The Fakir

துனுக்குகள்

 • தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படத்தில் இவர் நடித்திருந்தார்
 • பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது
 • சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் தணுஷ்.  தமிழ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். தமிழ் திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் முதல் முறையாக அவர் அறிமுகமான படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்'இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார்.
 
இதில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை ஏமாற்றுவார் தனுஷ். இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில்  ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது.

சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. குறுகிய காலத்தில் வந்து தன்னுடைய இயல்பான நடிப்புத்திறமையாள் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இவர், தற்போது ஆங்கிலத்தில் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றி பெறுமை சேர்த்திருக்கிறார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com