முகப்புஹாலிவுட்

உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் திரைத்துறையினர் வேதனை!

  | July 08, 2019 16:59 IST
Cameron Boyce

துனுக்குகள்

 • இவர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் ஆவார்
 • டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் இவர்
 • நேற்று முன்தினம் உடல் நலன் சரியில்லாததால் இறந்தார்
உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் தூக்கத்தில் இருந்த பேதே இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடனக்கலைஞர், நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கேமரூன் பாய்சி. டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்.
 
இவருக்கு வயது 20.குழந்தைகளைக் கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
இவர் ‘மிரர்', ‘ஈகல் ஐ', ‘கிரோம் அப்', ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘தி லெஜன் ஆஃப் எக்ஸ்ராட்ணரி டான்சர்' வெப் சீரியஸில் நடித்திருக்கிறார்.
 
ட்விட்டரில் தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடரும் கேம்ரூன் பாய்சி இளம் வயதிலேயே மரணமடைந்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடையச்செய்துள்ளது.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com