முகப்புஹாலிவுட்

'எனக்கு கொரோனா இருக்கிறது' - ட்விட்டரில் செய்தி வெளியிட்ட Idris Elba

  | March 18, 2020 15:35 IST
Idris Elba

துனுக்குகள்

  • தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும்
  • பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்
  • Heimdall என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது
உலகம் முழுதும் சுமார் 6000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது கொரோனா நோய்த் தொற்று, இந்தியாவைப் பொறுத்தவரை 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தாக்கத்தால் மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இந்த நோய் பரவாமல் இருக்கப் பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

தமிழகத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுஒருபுரம் இருக்க உலக அளவில் சில திரைத்துறை பிரபலங்களும் தற்போது இந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ள நிலையில் தற்போது அடுத்தபடியாக பிரபல நடிகர் 'இட்ரிஸ் எல்பா' கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

1999ம் ஆண்டு வெளியான 'Belle maman' என்ற படத்தின் நடிக்க வந்த இவர் Thor, Ghost Rider, Pacific Rim போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். Thor, Thor Agnarok மற்றும் Avengers : Infinity War போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த Heimdall என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. சினிமா மற்றும் இல்லாமல் சிறந்த டப்பிங் கலைஞராகவும் திகழும் இவர் தற்போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைக் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தான் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் கூறும் அவர், மக்கள் அனைவரும் உரியப் பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்