முகப்புஹாலிவுட்

கொரோனா நிவாரணத்துக்காக தனது நிர்வாண புகைப்படத்தை ஏலத்தில் விற்கும் பிரபல நடிகை!

  | June 05, 2020 06:43 IST
Auction

ஜெனிஃபர் அனிஸ்டன் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி எனபது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன், கொரோனா நிவாரண நிதிக்காக தனது நிர்வாண புகைப்படத்தை ஏலத்தில் விற்கிறார்.

கொரோனா வைரஸ் நிவாரண நிதியை வழங்குவதற்காக 1995-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தனது நிர்வாண உருவப்படங்களில் ஒன்றை ஏலம் விடுக்க ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் முடிவு செய்துள்ளார்.

புகைப்படக் கலைஞர் மார்க் செலிகரால் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், அனிஸ்டன் தனது உடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய விதத்தில் கால்களால் அமர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் உலகளவில் வைரலாகிவருகிறது.

ஜெனிஃபர் அனிஸ்டனுக்கு தற்போது 51 வயது ஆகிறது. அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி எனபது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com