முகப்புஹாலிவுட்

'வரலாற்றில் இது நான்காம் முறை' - ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்கார் திருவிழா..!!

  | June 16, 2020 18:57 IST
Oscar

துனுக்குகள்

 • ஆஸ்கார், சினிமா என்னும் மாய உலகில் பயணிக்கும் பலரின் உட்சபட்ச கனவு
 • 1938ம் ஆண்டு Los Angels நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது
 • ஆஸ்கார் தடைபடுவது வரலாற்றில் இது நான்காவது முறை
மதிப்புமிக்க விருது வழங்கும் விழாக்களில் ஒன்றான Academy of Motion Picture Arts and Science நடத்தும் ஆஸ்கர் விருது சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. வெளியான அந்த அறிக்கையின்படி, ஸ்ட்ரீமிங் சேவைகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும், இருப்பினும், 93 வது ஆஸ்கார் விருதுகளுக்கு மட்டுமே..! எனக் கூறியுள்ளது.

மேலும் வரவிருக்கும் 2021ம் ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பரவி வரும் கொரோனா காரணமாக பல முக்கிய நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளது போல ஆஸ்கார் விருது வழங்கும் விழாவும் தற்போது தடைப்பட்டுள்ளது . மேலும் இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

1929ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது இந்த ஆஸ்கார் திருவிழா. 1938ம் ஆண்டு Los Angels நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, 1968ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொலையுண்டபோது மற்றும் 1981ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் கொலையுண்ட நேரம் ஆகிய மூன்று முறை மட்டுமே தள்ளிவைக்கப்பட்டது. ஆகவே ஆஸ்கார் தடைப்படுவது வரலாற்றில் இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com