முகப்புஹாலிவுட்

'ஹாலிவுட்டில் களமிறங்கும் நாயகர்கள்' - வெளியானது 'Trap City' போஸ்டர்..!!

  | July 18, 2020 10:26 IST
Trap City

துனுக்குகள்

 • ஹாலிவுட்டில் தயாராகும் ‘ட்ராப் சிட்டி' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்தி
 • ‘ட்ராப் சிட்டி' என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க
 • தற்போது இந்த படத்தின் official Look போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாக சசியின் இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 

இந்நிலையில், அவர் ஹாலிவுட்டில் தயாராகும் ‘ட்ராப் சிட்டி' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 

‘ட்ராப் சிட்டி' என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே. கனேசன் தயாரிக்கிறார். அவர் முன்னதாக ‘டெவில்ஸ் நைட்' திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். அப்படத்தில் மூத்த தமிழ் நடிகர் நெப்போலியனையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் Official Poster வெளியாகி உள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com