முகப்புஹாலிவுட்

ஹாலிவுட் கிளாசிக்ஸ் : ஃபைட் கிளப்

  | January 29, 2019 19:41 IST
Hollywood

துனுக்குகள்

 • 1999 ஆம் ஆண்டு வெளியானது ஃபைட் கிளப்
 • நாளடைவில் கல்ட் ஸ்டேடஸ் பெற்றது இந்த படம்
 • பிராட் பிட் , எட்வர்ட் நார்தன் உட்பட பலர் நடித்திருப்பார்கள்
சக் பலான்னுக்கின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ஃபைட் கிளப்.

எட்வர்ட் நார்டன், பிராட் பிட் மற்றும் ஹெலினா கார்டர் ஆகியோரின் இணையிள்ளா நடிப்பில் உருவான இந்த படத்தின் இயக்குனர் டேவிட் பின்சர். தன் வாழ்க்கையை வெறுக்கும் எட்வர்ட் விமான பயணம் ஒன்றில் டைலர் டர்தனை (பிராட் பிட்) சந்திக்கிறான். அந்த சந்திப்பிற்கு பின் அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுன் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் உயிரே வசனங்கள் தான். கார்ப்ரேட் எதிர்ப்பு மற்றும் பொருள்சார் எதிர்ப்பு (Anti Materialistic) ஆகியவற்றை பற்றி பேசும் இந்த படம்.

வாழ்க்கையின் மீது வெறுப்பில் இருக்கும் எட்வர்ட், தூக்கமின்மையால் அவதிப்படுவார். கான்சர் நோயாளிகளுக்கான கிளப்பில் இணையும் எட்வர்ட், அங்கு மர்லா சிங்கரை காண்பார். வேலை விஷயமாக விமான பயணத்தின் போது டைலர் டர்தனுடன் நட்பு கொள்வார் எட்வர்ட். இருவரும் சேர்ந்து ஃபைட் கிளப் என்னும் கிளப்பை ஆரம்பிப்பார்கள். அந்த கிளப்பில் இணைப்பவர்கள், சண்டைப் போட்டு கொள்வார்கள். ஃபைட் கிளப் மக்களிடையே பிரபலமாகி விடும். அந்நேரத்தில், மர்லா சிங்கர் டைலர் டர்தனை காதலிப்பார். டர்தனுக்கும் எட்வர்டும் பிரிந்து விடுவார்கள். இறுதியில் என்னவானது என்பது தான் கிளைமாக்ஸ். இந்த படத்தின் கிளைமாக்ஸில் மிக பெரிய ட்விஸ்ட் உண்டு.
1999 ஆம் ஆண்டில் வெளியானது இந்த படம். வெளியான போது இது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், நாளடைவில் இந்த படமானது கல்ட் (Cult) ஸ்டேடஸ் பெற்றது. Anti Materialistic மற்றும் Anti Corporate பேசும் இந்த படம். இந்த படத்தில் நடித்த நடிகர்கள், தங்களின் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்கள். அதிலும் பிராட் பிட்டின் நடிப்பு வேற லெவல்.

இந்த படத்தை இயக்கிய டேவிட் பின்சரின் இயக்கம் பலரால் பாராட்டப்பட்டது.இந்த படத்திற்கு தி டஸ்ட் பிரதர்ஸ் இசையமைத்திருப்பார்கள். படத்தின் எடிட்டர் ஜேம்ஸ் ஹெய்குட். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெப் கிரோனோன்வெல்ட்

இந்த படம் மூலம் பிரபலமான வசனங்கள்:
 • First rule of Fight Club is—you do not talk about Fight Club.
 • We buy things we don't need with money, we don't have to impress people we don't like”
 • Things you own end up owing you
 •  Advertising has us chasing cars and clothes, working jobs we hate so we can buy shit we don't need. 
 • We've all been raised on television to believe that one day we'd all be millionaires, and movie gods, and rock stars, but we won't. We're slowly learning that fact. And we're very, very pissed off.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்