முகப்புஹாலிவுட்

ஹாலிவுட் கிளாசிக்ஸ் : தி காட்ஃபாதர்

  | January 29, 2019 19:51 IST
Godfather

துனுக்குகள்

  • 1972 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது
  • உலகின் தலைசிறந்த படமாக இது கொண்டாடப்படுகிறது
  • சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை மர்வின் பிராண்டோ வென்றார்
தி காட்ஃபாதர்

உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்று ‘தி காட்ஃபாதர்'.  மரியோ புசோவின் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், பல இயக்குநர்களின் விருப்பமான படமாகும்.

1972 ஆம் ஆண்டு ப்ரான்சிஸ் ஃபோர்ட் கோப்போலா இயக்கிய இந்த படத்தில் கதாநாயகனாக மர்லின் பிராண்டோ நடித்திருப்பார் என கூறுவதை விட காட்ஃபாதராக வாழ்ந்திருப்பார்.
பல கிளாசிக் கல்ட் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. ஆனால், இந்த படம் வணிக ரீதியாக பல சாதனைகளை படைத்தது.
1945 ஆம் ஆண்டு நடப்பது போல் தி காட்ஃபாதர் படம் அமைக்கப்பட்டிருக்கும். டான் விட்டோ (மர்லின் பிராண்டோ) டான்களின் தலைவர். மாஃபியா உலகின் கதை தான் இந்த படம். ஐந்து பெரிய டான்களுக்கு இடையே நடக்கும் சண்டை, தனது நண்பர்கள், தனது எதிரிகளை எவ்வாறு டான் விட்டோ சமாளிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. குடும்ப அரசியலையும் இந்த படம் பேசும் டான் விட்டோவின் மகனாக மைக்கெல் ( அல் பாசினோ) நடித்திருப்பார். இந்த படம் மிகையில்லா நடிப்பாலும் மாஃபியா உலகை நம்பும்படி காட்டிய விதத்தாலும் செம ஹிட் ஆனது.

உலக அரங்கில் நடிப்பின் மாமன்னராக கருதப்படுபவர் மர்லின் பிராண்டோ. சிவாஜி, கமல் ஆகியோர் தங்களின் முன் மாதிரியாக மர்லின் பிராண்டோவை கூறுவார்கள். அப்படிபட்ட மர்லின் பிராண்டோ, தான் ஏன் நடிப்பின் அடையாளமாக கருதப்படுகிறேன் என்பதை இந்த படத்தின் நடிப்பு மூலம் நிரூப்பித்திருப்பார். தி காட்ஃபாதர் 2, தி காட்ஃபாதர் 3 என அடுத்தடுத்த பாகங்கள் வந்து நல்ல வரவேற்பை பெற்றாலும், அந்த பாகங்களில் மர்லின் பிராண்டோ இல்லாத குறை தெளிவாக தெரிந்தது.

மூன்று மணி நேரம் ஓட கூடிய இந்த படமானது, 6.5 மில்லியன் டாலர் செலவில் உருவானது. உலகம் முழுவதும் அதிரிபுதிரி ஹிட் ஆகி, 280 மில்லியன் டாலர் வரை சம்பாதித்தது இந்த படம். இன்று எடுக்கப்படும் அனைத்து மாஃபியா படங்களிலும் தி காட்ஃபாதர் படத்தின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.

1973 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது பட்டியலில் 11 விருதுகளுக்கு தி காட்ஃபாதர் படமானது பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த படம் தழுவி எழுதப்பட்ட திரைகதை என மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருதை இந்த படம் வென்றது.

ஆஸ்கர் விருது விழாவை பிராண்டோ புறக்கணித்தார். அமெரிக்க இந்தியர்களை அமெரிக்காவின் சினிமா உலகம் நடத்தும் விதம் தனக்கு பிடிக்காததால் தான் ஆஸ்கர் விருதை புறக்கணித்தாக மர்லின் பிராண்டோ தெரிவித்தார். இது சினிமா உலகில் ஒரு புரட்சியாக பார்க்கப்பட்டது.

ஃபோர்ட் கோப்போலா இயக்கிய இந்த படத்தை, பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. நினோ ரோட்டா இசையமைத்தார். ஒளிப்பதிவை கொர்டன் வில்ஸ் கவனித்தார். இந்த படத்தின் எடிட்டர் வில்லியம் ரெனால்ட்ஸ் மற்றும் பீட்டர் சின்னர் ஆவார்கள்.

இந்த படம் மூலம் பிரபலமான வசனங்கள்: 

Don Vito Corleone: I'm gonna make him an offer he can't refuse.
Don Vito Corleone: Revenge is a dish best served cold.
Don Vito Corleone: It's an old habit. I spent my life trying not to be careless -- women and children can be careless, but not men
Don Vito Corleone: A man who doesn't spend time with his family can never be a real man.
Don Vito Corleone: Friendship is everything. Friendship is more than talent. It is more than the government. It is almost the equal of family 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்