முகப்புஹாலிவுட்

ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் தலைவன் டாம் க்ரூஸின் ‘டாப் கன்: மேவ்ரிக்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

  | April 03, 2020 13:48 IST
Tom Cruise

‘டாப் கன்: மேவரிக்’ திரைப்படம் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘டாப் கன்’ படத்தின் தொடர்ச்சியாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுக்க பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று சினிமாதுறை. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இதே நிலைதான். இந்நிலையில் கடந்த மார்ச் பாதியிலிருந்து மே மாதம் வரை வெளியாகவிருந்த பல திரைப்படங்கள் வெளியாவதில் தடைபட்டுள்ளது.

மக்களின் உயிரை விட பொழுதுபோக்கின் ஒரு பகுதியான திரைப்படம் ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல என்ற நிலைக்கு தற்போது உலகமே வந்தடைந்துள்ளதையடுத்து, பல திரைப்படங்கள் முன்னதாகவே அதன் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

அதேபோல் ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘டாப் கன்: மேவரிக்' வெளியீடு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் ஹீரோ ‘ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார்' டாம் க்ரூஸ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பாரமவுண்ட் பிக்சர்ஸின் இப்படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது 2020 டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

டாம் க்ரூஸ் தனது சமூக வாலைதள பக்கத்தில் “உங்களில் பலர் 34 ஆண்டுகள் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் சிறிது காலம் நீடிக்கும். ‘டாப் கன்: மேவரிக்' இந்த டிசம்பரில் பறக்கும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் டாம் க்ரூஸுக்கு உலகம் முழுவது கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக் ஒவ்வோரு படத்தில் அவரது உன்மையான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் எல்லோரையும் கவர்ந்த ஒரு டாப் ஆக்‌ஷ்ன் ஹீரோவாக திகழ்கிறார். அவரது நடிப்பில் 1986-ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் திரைப்படம் ‘டாப் கன்'. அதன் தொடர்ச்சியே தற்போது 34 ஆண்டுகள் கழித்து ‘டாப் கன்: மேவரிக்' என உருவாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com