முகப்புஹாலிவுட்

ஜேம்ஸ் பாண்ட் ‘No Time To Die’ புதிய டிரெய்லர் நாளை வெளியீடு! கிரெய்கின் போஸ்டர் வைரல்!

  | September 03, 2020 12:59 IST
No Time To Die

இப்படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் அதே அளவிற்கு, நாளை வெளியாகவுள்ள டிரெய்லருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் 6 மாதங்களுக்கு மும்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருந்த இந்த திரைப்படம், கொரோனா காரணமாக நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் கடந்த மார்ச் மாதம் வெளியானது. ஆனால் தேதி குறிப்பிடாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். உலகம் முழுவதும் பறவிவரும் கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு தான் இது. இந்நிலையில் NO TIME TO DIE அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் - 12ம் தேதி லண்டனிலும் நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவிலும் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் மீண்டும் விளம்பரங்களைத் தொடங்கியுள்ளது. உளவாளியாக கிரெய்கின் புதிய போஸ்டர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை (வியாழக்கிழமை) இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் அதே அளவிற்கு, நாளை வெளியாகவுள்ள டிரெய்லருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com