முகப்புஹாலிவுட்

'நோ டைம் டு டை’ வெளியானது “ஜேம்ஸ் பாண்ட் 007” 25வது படத்தின் தலைப்பு!

  | August 21, 2019 14:13 IST
James Bond 25

துனுக்குகள்

 • இப்படம் 24 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடைம் நல்ல வரவேற்பை பெற்றன
 • தற்பாது 25வது பாகத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது
 • டேனியல் கிரேக் கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கிறார்
“ஜேம்ஸ் பாண்ட் 007” 25வது படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
உலக அளவில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட படம் “ஜேம்ஸ் பாண்ட் 007”. இதன் 24 பாகம் வரை இப்படம் உலக அரங்களில் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.


 
இந்நிலையில் ‘ஜேம்ஸ் பாண்ட் 007” 25வது படம் எப்போது வெளியாகும் அதன் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 25வது படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் 007 திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது. 1962ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் டாக்டர் நோ வெளியானது. அதன் பிறகு தொடர்ச்சியாக 24 படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படத்திற்கு 'நோ டைம் டு டை ( NO TIME TO DIE) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல் கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com