முகப்புஹாலிவுட்

அவதார்-2 படப்பிடிப்பை தொடர நியூசிலாந்த் சென்ற கேமரூன்; 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டார்.!

  | June 02, 2020 15:55 IST
Avatar 2

‘அவதார் 2’ டிசம்பர் 17, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், 50-க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவதார்' பட தொடர்களின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நியூசிலாந்த்தை அடைந்துள்ளார்.

திரைப்படத் தொடரின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்காக இந்த 54 பேர் கொண்ட பிரிவு ஒரு பட்டய விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நியூசிலாந்தின் வெலிங்டனை அடைந்தது.

இருப்பினும், படப்பிடிப்பு உடனடியாக மறுதொடக்கம் செய்யப்படாது, ஏனெனில் அந்நாட்டின் அவசரகால சட்டங்கள் அல்லது விதிகளின் கீழ், குழு உறுப்பினர்கள் முதலில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இதனை, தயாரிப்பாளர் ஜான் லாண்டவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜேம்ஸ் கேமரூனும் அவரும் உள்ள இரண்டு புகைபடங்களை இணைத்து “இதை நியூசிலாந்திற்கு உருவாக்கியது. எங்கள் 14 நாள் அரசாங்கத்தின் மேற்பார்வையிடப்பட்ட சுய தனிமை இப்போது தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

‘அவதார் 2' டிசம்பர் 17, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன், கேமரூன் தனது ‘அவதார் 2' திட்டமிட்டபடி வெளியாகும் என்று தான் நம்புவதாக பகிர்ந்து கொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com