முகப்புஹாலிவுட்

‘அவதார்-2’ பட்ஜெட் ரூ.7,500 கோடியா.? படப்பிடிப்பை தொடங்கிய ஜேம்ஸ் கேமரூன்..!

  | May 13, 2020 13:26 IST
Avatar

2009ல் வெளியான ‘அவதார்’ சுமார் 237 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 2.79 பில்லியன் டாலர் சம்பாதித்தது.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை படப்பிடிப்புகளுக்கான தடையை பூட்டுதல் நடவடிக்கைகளிலிருந்து நியூசிலாந்து அரசு நீக்கியுள்ளது. அதையடுத்து, நியூசிலாந்தில் தயாரிப்பில் இருந்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் தனது அவதார் தொடர்ச்சிகளை இப்போது தொடங்கி படப்பிடிப்பை நடத்திவருகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இப்படத்தின் அடுத்தடுத்த ஒவ்வொரு  தொடர்ச்சி படத்திற்கும் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதாவது அவதார் 2 டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் என்றும்; 2023 டிசம்பரில் அவதார் 3; 2025 டிசம்பரில் அவதார் 4; மற்றும் 2027-ஆம் ஆண்டு அவதார் 5 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்பாராத தாமதம் இருந்தபோதிலும், முதல் தொடர்ச்சி குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை சந்திக்கும் என்று நம்புவதாக கேமரூன் சமீபத்தில் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்' திரைப்படம், சுமார் 237 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 2.79 பில்லியன் டாலர் சம்பாதித்தது.

இப்போது ‘அவதார்' தொடர்ச்சி படங்களுக்கான ஒருங்கிணைந்த பட்ஜெட் 1 பில்லியன் டாலர் (ரூ .7500 கோடி) என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் நான்கு திட்டங்களை வகுத்துள்ள நிலையில், ஒரு எளிய கணக்கு போட்டால் ஒவ்வொரு அவதார் தொடர்ச்சிக்கும் தலா 250 மில்லியன் டாலர் செலவாகும்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com