முகப்புஹாலிவுட்

"அவதார் வெறும் சைன்ஸ் ஃபிக்ஷன் படம் மட்டும் இல்ல" - ஜேம்ஸ் கேமரூன்

  | April 23, 2018 14:29 IST
James Cameron

துனுக்குகள்

 • 2009ல் வெளியாகி உலகம் முழுக்க பெரிய வரவேற்பைப் பெற்றது அவதார்
 • அதன் 2,3வது பாகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்
 • இதைத் தொடர்ந்து 4,5 பாகங்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்
2009ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்த இந்த சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு பாகங்களுக்குமான ஷூட்டிங் மட்டுமே இன்னும் 100 நாட்கள் பாக்கி இருக்கிறதாம்.

எனவே இரண்டு பாகங்களுக்கான வேலைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார் கேமரூன். இந்த இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றால், அவதாரின் நான்காவது, ஐந்தாவது பாகங்களை உருவாக்குவேன், அதற்கான கதைகள் தயாராக இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.

"இது வெறும் சைன்ஸ் ஃபிக்ஷன் படம் மட்டும் இல்லை, என்னைப் பொறுத்தவரை a generational family saga எனக் கூறுவேன். இனி வர இருக்கும் பாகங்கள் எல்லாம் நீங்கள் கற்பனைகூட செய்யாததாக இருக்கும்" என சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கேமரூன். `அவதார் 2' படம் 2020 டிசம்பரில் வெளியாகவிருக்கிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com