முகப்புஹாலிவுட்

‘கோல்டன் ஃப்ராக்’ விருது பெற்ற ‘ஜோக்கர்’

  | November 18, 2019 17:33 IST
Joker

துனுக்குகள்

  • ஜோக்கர் திரைப்படம் கடந்த அக்டோபர் வெளியானது.
  • ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் ஜோகின் பீனிக்ஸ் நடித்துள்ளார்.
  • இப்ப்டத்தை டாட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார்.
ஜோகின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்துக்கு கோல்டன் ஃப்ராக் விருது வழங்கப்பட்டுள்ளது.

டாட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோகின் பீனிக்ஸ் நடிப்பில் ‘ஜோக்கர்' திரைப்ப்டம் கடந்த அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ் மற்றும் டி.சி பிலிம்ஸ் இணைந்து தயாரித்தது. இப்ப்டம் கோதம் நகரத்தில், தோல்வியுற்ற நகைச்சுவை நடிகரான ஆர்தர் ஃப்ளெக், தொடர்ந்து துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்குப் பிறகு ஜோக்கராக எப்படி மாறுகிறார் எனும் DC காமிக்ஸில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் கதையாகும்.

கடந்த வாரம் ‘ஜோக்கர்' உலக பாக்ஸ் ஆபிஸில் 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 7,184 கோடி) வசூலித்த வரலாற்றில் முதல் R-Rated திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், உலகின் மிகப்பெரிய திரைப்பட சந்தையான சீனாவில் வெளியிடாமல், அந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது திரைப்படம் இன்ற பெருமையையும் அடைந்துள்ளது. 
இந்நிலையில், ​​போலந்த் நாட்டில் நடைபெற்ற எனர்ஜேகேரிமேஜ் விழாவில் இந்த படம் அதன் ஒளிப்பதிவுக்காக கோல்டன் ஃப்ராக் விருதைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் (Audience Award) பார்வையாளர் விருதையும் வென்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்