முகப்புஹாலிவுட்

உகலகளவில் 150மில்லியன் டாலர் வசூலித்த ‘TENET’.! லேட்டஸ்ட் ஹாலிவுட் அப்டேட்..

  | September 07, 2020 22:51 IST
Tenet

தகவல்களின்படி, டெனெட் உலகளவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் எனக் கூறப்படுகிறது.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் வெளியான படங்களில் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்'உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். வெளியீட்டு தேதியை நிர்ணயிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்னும் பின்னுமாக தள்ளப்பட வாய்ப்பிருந்தும், ‘டெனட்' இறுதியாக நோலன் பிடிவாதமாக இருந்த நாளிலேயே வெளியாகியுள்ளது.

k0r44l9

அமெரிக்காவில், ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் நடித்த இப்படம் 20.2 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட்ட ரூ. 150 கோட்யாகும். கவனிக்க வேண்டியது அமெரிக்காவிலும் கனடாவிலும் முன்னோட்டங்களை உள்ளடக்கியதாகும்.

COVID-19 லாக்டவுனுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால், 20.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது நம்பமுடியாத அளவிற்கு குறைவாக இருக்கும், அமெரிக்க சந்தையில் 65 சதவிகிதம் மட்டுமே திறந்திருக்கும் நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட விளைவு தான். மேலும், தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து வெளியான அனைத்து படங்களிலும் ‘டெனெட்' நிச்சயமாக உள்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.

qfeorrb8

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் எண்களைப் பொறுத்தவரை, டெனெட் முதல் இரண்டு வார இறுதிகளில் 126 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது, இது மொத்தம் 146.2 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்தது. தகவல்களின்படி, டெனெட் உலகளவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com