முகப்புஹாலிவுட்

சிம்புவை விட்டுக் கொடுக்காத சுரேஷ் காமாட்சி..! “மீண்டும் கெத்தா தொடங்கும் மாநாடு"⁦

  | March 17, 2020 14:57 IST
Maanaadu

இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான் - சுரேஷ் காமாட்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயானாக நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு'. கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை V House பேனரின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாடு படப்பிடிப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. ஆனால் கொரோனா தொற்று நோயின் அச்சுறுத்தலால் பாதுகாப்பு கருதி, படப்பிடிப்புகள் தென்னிந்தியாவில் பல இடங்களில் தடைசெய்யப்பட்டது. அதையடுத்து, சிம்புவின் மாநாடு படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, சமூக வலைத்தளத்தில் சிம்புவையும் சுரேஷ் காமாட்சியையும் கலாய்த்து நெட்டிசன் ஒருவர் போட்ட மீம் வீடியோ செம வைரலானது.
இந்நிலையில், அந்த வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்புவை விட்டுக் கொடுக்காமல் ஒரு ட்வீட் போட்டுள்ளார் சுரேஷ். அதில் “கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை  இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் மாநாடு” எனப் பதிவிட்டுள்ளார்.

அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சுர்யா, ஒய்.ஜீ. மகேந்திரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் குமார் பாரதிராஜா, கருணாகரன் என நடிகர் பட்டாளமே உள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சார்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, கே.எல். பிரவீன் பதத்தொகுப்பு செய்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்