முகப்புஹாலிவுட்

அடுத்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ யார்.? டேனியல் கிரெய்கை தொடர்ந்து ‘வெனம்’ நாயகன்.!!

  | September 19, 2020 20:09 IST
Tom Hardy

நடிகர் டாம் ஹார்டி 'மேட் மேக்ஸ்: fury Road', வாரியர், வெனோம் மற்றும் இன்செப்ஷன் ஆகிய திரைப்படங்களின் பரபரப்பான நடிகர்

‘ஜேம்ஸ் பாண்ட்' என்பது ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட கதாப்பாத்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1962-ல் வெளியான DR.No என்பது தான் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் இடம் பெற்ற முதல் திரைப்படமாகும். அதிலிருந்து, இப்போது வரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த கதாப்பாத்திரத்தில் சியான் கன்னெரி, ரோஜர் மூர், பியர்ஸ் ப்ராஸ்னன், டிமொதி டால்டன் என பல நடிகர்கள் நடுத்துள்ளனர்.

இதில் கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால் மற்றும் கடைசியாக வெளியான ‘ஸ்பெக்டர்' வரை இந்த பிரிட்டிஷ் ரகசிய உளவாளி கதாப்பாத்திரத்தில் ராஜாவாக திகழ்ந்தவர் நடிகர் டேனியல் கிரெய்க்.

ஜேம்ஸ் பாண்ட் சீரீஸின் 25-வது திரைப்படமான ‘நோ டைம் டு டை' தான்  நடிகர் டேனியல் கிரெய்கின் இந்த ஐகானிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதன்பின்னர் அவருக்கு அடுத்ததாக நடிக்கக்கூடிய நடிகர் யார்? என்பது குறித்து ஏராளமான தகவல்கள் வந்தன.

p5eal1cg

மேட் மேக்ஸ், வாரியர், வெனோம் மற்றும் இன்செப்ஷன் ஆகிய திரைப்படங்களின் பரபரப்பான நடிகர் டாம் ஹார்டி தான், டேனியல் கிரெய்கிற்குப் பிறகு புதிய ஜேம்ஸ் பாண்டாக நடிக்கலாம் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் டாம் ஹார்டி புதிய ஜேம்ஸ் பாண்டாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ‘நோ டைம் டு டை' மீண்டும் 2021-க்கு தாமதமாகிவிட்டால் இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com