முகப்புஹாலிவுட்

மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் எப்போது வரும்?

  | January 21, 2019 11:48 IST
Marvel Cinematic Universe

துனுக்குகள்

  • ஸ்பைடர் மேன் : ஃபார் பிரம் ஹோம் படத்தின் ட்ரைலர் சென்ற வாரம் வெளியானது
  • கேப்டன் மார்வெல் மார்ச் மாதம் வெளியாகிறது
  • ஐயன் மேன், ஸ்பைடர் மேன் : ஃபார் பிரம் ஹோம் படத்தின் ட்ரைலரில் இல்லை
ஹாலிவுட் உலகில் எதிரும் புதிருமாக இருப்பது மார்வெல் மற்றும் டிசி. ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், ஹல்க், தோர், ப்ளாக் விதோ, ஹாக் ஐ உட்பட சூப்பர் ஹீரோக்கள் மார்வெல் உலகத்தில் தோன்றுவார்கள். பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் வுமன், அக்வாமேன் ஆகியோர் டிசி உலகின் சூப்பர் ஹீரோக்கள்.

இதில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக அவஞ்சர்ஸ் அமைந்துள்ளது. அவஞ்சர்ஸ் எண்ட் கேம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மார்வெல் உலகின் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வருகிறார்கள்.

சென்ற ஆண்டு வெளியான முதல் பாகத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பல சூப்பர் ஹீரோக்களை வில்லன் தானோஸ் அழித்து விடுவதாக காட்டப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தான் வரும் ஏப்ரலில் வெளியாகிறது. இதன் ட்ரைலர் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் ஆனது. இந்த படத்திற்கு முன்பும் பின்பும் வர இருக்கும் மார்வெல் உலக படங்களை காண்போம்.
கேப்டன் மார்வெல் :
 
4isq8lho

இது வரை மார்வெல் உலகின் திரைவடிவத்தில் வராத சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெல். அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கேப்டன் மார்வெலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் இறுதியில் கேப்டன் மார்வெலுக்கு தகவல் அனுப்பும் படி காட்சி இருந்தது.

இந்நிலையில், இந்த கேப்டன் மார்வெல் யார், அந்த சூப்பர் ஹீரோ எப்படி அவஞ்சர்ஸ் உலகிற்குள் வந்தாள் என்ற கேள்விகளுக்கு கேப்டன் மார்வெல் திரைப்படம் பதில் அளிக்கும். பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் படத்தில் பிரி லார்சன் நடிக்கிறார். மார்ச் 8,2019 இல் வெளியாக இருக்கும் இந்த படத்தை அன்னா ப்ராடன் மற்றும் ரையன் ப்ளாக் இயக்குகிறார்கள்.

ஸ்பைடர் மேன் : ஃபார் பிரம் ஹோம் :
 
hfhofdh8

அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் இறத்து போனதாக காட்டப்படும் சூப்பர் ஹீரோக்களில் ஸ்பைடர் மேனும் ஒருவர். இந்நிலையில், ஸ்பைடர் மேன் : ஃபார் பிரம் ஹோம் படத்தின் ட்ரைலர் சென்ற வாரம் வெளியானது. இந்த ட்ரைலரில் ஐயன் மேன் இடம் பெறவில்லை. ஒரு வேலை ஐயன் மேன், அவஞ்சர்ஸ் எண்ட் கேமில் இறத்து விடுவாரோ என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.
 

ஜூலை 5 திரைக்கு வரும் ஸ்பைடர் மேன் : ஃபார் பிரம் ஹோம் படத்தில், ஸ்பைடர் மேனாக டாம் ஹாலாந்த் நடித்துள்ளார். ஜேக் ஜில்லன்ஹால் வில்லனாக நடிக்கும் இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்குகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்