மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் எல்லா பாகங்களும் உலக சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. அதன் வரிசையில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் நிறைவு பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஏப்ரல் 26 அன்று வெளியானது.
வெளியான நாளில் இருந்தே நல்ல வசூல் லாபத்தை பெற்று வந்த இப்படம் 2.18 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி (15.121 கோடி) வசூல் பெற்றதன் மூலம் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
2.78 பில்லியன் டாலர் அதாவது 19.282 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் இப்படம் அடையவுள்ளது.
11 நாட்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டு மொத்த வசூலைத் தாண்டி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சாதனைப்படைத்துள்ளது. அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவேகன்ஸ், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலைத் தாண்டிய நிலையில் இந்த வெற்றி கோட்டையும் தாண்டிய ஐந்தாவது படம் என்கிற பெறுமையைப் பெற்றுள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
அடுத்தடுத்த நாட்களில் அவதார் படத்தின் வசூலையும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்து முதல் இடத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.