தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நெப்போலியன். இவர் அரசியல் ஈபாட்டிற்கு பிறகு சினிமாவிற்கு ஓய்வு கொடுத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு முத்துராமலிங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் நேற்று சமூகவலைதளங்களில் நெப்போலியன் ஹாலிவுட் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படம் “கிறிஸ்துமஸ் கூபன்” என்கிற ஹாலிவுட் படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. நெப்போலியனை போல் வெளிநாட்டில் ஐடி நிறுவனம் நடத்தி வரும் அவருடைய நண்பர் பெல் கணேஷன் தயாரித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்த நெப்போலியன் இந்த படம் குறித்து பேசினார். அப்போது,
“ அமெரிக்காவில் ஐடி விறுவனம் நடத்தும் என்னுடைய நண்பர் பெல் கணேசன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னிடம் வந்து நான் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்போகிறேன். அதில் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன்.
என்னை தவிர இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். இந்த படத்தில் நான் ஒரு விளையாட்டு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்துள்ளது. நடிகர் சங்கத்தில் தலைவராக விஜயகாந்தும், செயலாளராக சரத் குமாரும், துணைத்தலைவராக நானும் இருந்தபோது நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருந்தது. அரசியல் குறித்த கேள்விக்கு நான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை” என்று கூறினார்.