முகப்புஹாலிவுட்

Tom Cruise-ன் அடுத்த படத்துக்காக இணைந்த SpaceX & NASA..!

  | May 07, 2020 12:47 IST
Tom Cruise

இந்த படம் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஒவ்வோரு படத்திலும் அவரது உன்மையான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் எல்லோரையும் கவர்ந்த ஒரு டாப் ஆக்‌ஷன் ஹீரோவாக திகழ்கிறார்.

மிஷன் இம்பாசிபிள் ஃபிராங்க்சைஸ், எட்ஜ் ஆஃப் டுமாரோ, ஜாக் ரியான், ஜெர்ரி மாகுவேர், டாப் கன் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பிரபலமான டாம் குரூஸ், தற்போது விண்வெளியில் ஒரு திரைப்படத்தை படமாக்க தயாராக இருப்பதாக ஹாலிவுட் ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வந்தன.

இந்த புதிய அதிரடி சாகச படத்திற்காக டாம், எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் நாசாவுடன் இணைந்து செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது, நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது ட்வீட் மூலம் அதை உறுதிப்படுத்தியுள்ளார். "நாசா, ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஒரு படத்திற்காக டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளது! நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்க புதிய தலைமுறை பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க பிரபலமான ஊடகங்கள் எங்களுக்குத் தேவை!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படம் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Elan Musk திரைப்படத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பிரிடென்ஸ்டைனின் ட்வீட்டுக்கு அவர் "மிகவும் வேடிக்கையாக இருக்கப் போகிறது!" என்று பதிலளித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com