முகப்புஹாலிவுட்

“தமிழ் படங்களில் நடித்ததில் மகிழ்ச்சி” ஹாலிவுட் போகிறார் நிவேதா பெத்துராஜ்…?

  | April 02, 2019 20:46 IST
Nivetha Pethuraj

துனுக்குகள்

 • ஒரு நாள் கூத்து படத்தில் நடித்துருந்தார் இவர்
 • பிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் படத்தில் இவர் நடித்திருக்கிறார்
 • ஜகஜால கில்லாடி,’ ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது
ஒரு கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து  டிக்.டிக்.டிக், திமிரு புடிச்சவன், ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து  ‘பொன்மாணிக்கவேல்,' ‘ஜகஜால கில்லாடி,' ‘பார்ட்டி' உள்பட பல படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போவதாக அவர் தற்போது கூறுகிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
“தமிழ் படங்களில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து அமெரிக்கா சென்று ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா போய் விடுவேன்.

இந்த விஷயத்தில், எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காகவே ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன்.”

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com