முகப்புஹாலிவுட்

ஆஸ்கர் 2020 : சிறந்த நடிகர் ‘ஜோக்கர்’ Joaquin phoenix..!

  | February 10, 2020 14:20 IST
Oscar 2020

ஜோக்கர் திரைப்படத்தை ஸ்காட் சில்வருடன் இணைந்து எழுதி, டாட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார்.

கோக்கர் திரைப்படத்தில் நடித்ததற்காக ஜோக்வின் பீனிக்ஸ்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

உலக திரைப்படங்களுக்கும், அந்த திரைப்படத்தில் உழைத்த எல்லா கலைஞர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜோக்கர்' திரைப்படத்தில் ‘Arthur Fleck' கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்திய ஜோக்வின் பீனிக்ஸ்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஜோக்கர் திரைப்படத்தை ஸ்காட் சில்வருடன் இணைந்து எழுதி, டாட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வரும் ஆர்தர் ஃப்ளெக் கதாப்பாத்திரம் DC காமிக்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. தோல்வியுற்ற நகைச்சுவை நடிகர் ஆர்தர் ஃப்ளெக், சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிறகு ஜோக்கர் என்று அழைக்கப்படும் கிரிமினல் சூத்திரதாரியாக மாறி, எப்படி பைத்தியக்காரத்தனமாக காரியங்களை செய்யத் தொடங்குகிறார் என்பது தான் 'ஜோக்கர்' திரைப்படத்தின் கதையாகும்.

     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்