முகப்புஹாலிவுட்

ஆஸ்கர் 2020 : சிறந்த படம் உட்பட 6 விருதுகளைத் தட்டிச் சென்ற ‘Parasite’

  | February 10, 2020 16:48 IST
Oscar 2020

முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத ஒரு படம் ஆஸ்கர் விருதை வென்றது.

ஆஸ்கர் 2020 விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்' உட்பட 6 விருதுகளைப் பெற்றுள்ளது 'பாரசைட்' திரைப்படம்.

முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத ஒரு படம் ஆஸ்கர் விருதை வென்றது.

92-வது அகாடமி விருதுகளில் ‘பாரசைட்' திரைப்படம் முதல் பரிசைப் பெற்றுள்ளது. ‘1917' மற்றும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் ஹாலிவுட்' ஆகிய சிறப்பான திரைப்படங்களுடன் கடுமையாக போட்டியிட்டு இந்த விருதைப் பெற்றுள்ளது ‘பாராசைட்'.

மேலும் இப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை உள்ளிட்ட விருதுகளையும் வென்றது. இதுதான் தென் கொரியாவின் முதல் பரிந்துரைக்கப்பட்ட படமாம். மொத்தமாக இப்படம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது.

கொரிய மொழி திரைப்படமான இத, ஏழை மற்றும் வேலையற்ற கிம் என்பவரது குடும்பத்தைப் பற்றியது. தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம், பார்க் என்பவரின் குடும்பத்தில் திட்டம் வகுத்து வேலைக்குச் சேர்கின்றனர். சந்தர்ப சூழ்நிலையால் ஒரு கட்டத்தில், பார்க்கிடம் சிக்கிக்கொள்கின்றனர். இதற்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் படத்தை ரசிக்கும் படியாக அமைத்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'பாராசைட்' உலகளவில் 165 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com