முகப்புஹாலிவுட்

ஆஸ்கர் 2020 : ஆசியாவிலேயே ஆஸ்கர் வென்ற 2-வது இயக்குநர் - போங் ஜூன் ஹோ

  | February 10, 2020 16:41 IST
Oscars 2020

ஆசிவிலேயே ஆஸ்கர் வென்ற இரண்டாவது இயக்குனர் போங் ஜூன் ஹோ ஆவார்.

பாராசைட் திரைப்படத்தை இயக்கிய கொரிய இயக்குனர் போங் ஜூன் ஹோ இந்த ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

போங் ஜூன் ஹோ விருதைப் பெற்றுக்கொண்டு "பரிந்துரைக்கப்பட்டிருப்பதே ஒரு பெரிய மரியாதை, நான் வெல்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று கூறிய அவர் தனது கோப்பையை ஐந்து துண்டுகளாக பிரித்து தனது சக வேட்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

ஆசிவிலேயே ஆஸ்கர் வென்ற இரண்டாவது இயக்குனர் போங் ஜூன் ஹோ ஆவார். முன்னதாக இயக்குனர் ஆங் லீ "ப்ரோக் பேக் மவுண்டன்" மற்றும் "லைஃப் ஆஃப் பை" ஆகிய படங்களுக்கு இரண்டு முறை ஆஸ்கர் வென்றார்.

ஆங்கிலம் அல்லாத ஒரு படத்திற்கான விருதை முன்னதாக இயக்குனர் அல்போன்சோ குவாரன் "ரோமா" படத்திற்காக வென்றார். அதையடுத்து, போங் ஜூன் ஹோ வென்றுள்ளார்.

பாராசைட் திரைப்படம் சிறந்த படம், சிறந்த சர்வதேச திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை உட்பட 6 விருதுகளை வென்றுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com