முகப்புஹாலிவுட்

ஹாலிவுட் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே!!

  | September 19, 2019 12:29 IST
Radhika Apte

ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்

துனுக்குகள்

  • கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே
  • தற்போத இவர் ஹாலிவுட் இணையதொடரில் நடிக்கவுள்ளார்
  • தமிழ், இந்தி என இரண்டு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர்
Rathika Apte: தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான " கபாலி" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த நாயகி ராதிகா ஆப்தே. இந்த படத்தைத் தொடர்ந்து தோனி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை வெளிபடுத்தினார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர, நேர்மையாகவும் தைரியமாகவும் தன் கருத்தை முன் வைக்கக்கூடியவர். பெண்கள் ஆடை அனிவது குறித்த தன் கருத்தை தொலைநோக்கு பார்வையில் வெளிபடுத்தக்கூடியவர். இதனால் இவரை சுற்றி கலாச்சார பாதுகாவல்ர்களின் விமர்சனங்களும்  இருந்து வருகிறது. எவ்விதமான விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொண்டு தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு பல வெற்றிகளை நோக்கி அவரது பயணம் நீண்டுக்கொண்டிருகிறது 

இவர் இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் வெப் தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகி உள்ளார். ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் 2000-ம் ஆண்டு டாம்குரூஸ் நடிப்பில் திரைக்கு வந்த ‘மிஷன் இம்பாசிபிள் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

இந்த வெப் தொடரில் சார்லி ஹுன்னம் என்ற ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார். டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. ஆஸ்திரேலியா சிறையில் இருந்து தப்பும் நாயகன் மும்பை பகுதியில் குடியேறி அந்த பகுதி மக்களுக்கு உதவுவதே இந்த தொடரின் கதை.
இந்தியா ஆஸ்திரேலியா, ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்