முகப்புஹாலிவுட்

ஸ்பைடர்மேனை காப்பாற்றுங்கள் கதறும் ரசிகர்கள்!

  | August 21, 2019 17:21 IST
Spiderman

துனுக்குகள்

 • ஸ்பைடர் மேன் படத்தை தயாரிப்பதில் இருந்து மார்வெல் விலகியது
 • மார்வெல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 • ஸ்பைடர் மேனை காப்பாற்ற ட்விட்டரில் குரல் கொடுத்து வருகிறார்கள்
உலக சினிமா ரசிகர்களின் சூப்பர் ஹீரோக்கள் படங்களில் முக்கியமான படம் ஸ்பைடர் மேன். எட்டுகால் பூச்சி கடித்ததில் சூப்பர் ஹீரோவாகும் இளைஞன் சிறியவர்கள் முதல் முதல் பெரியவர்கள்வரை கவர்ந்த கதாபாத்திரமாக மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
 
இப்படம் பல பாகங்கள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இந்த திரைப்படத்தை தயாரிக்கும் குழுவில் இருந்து விலகுவதாக மார்வெல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் மூலம் பெறப்படும் வருமானத்தை பகிர்வதில் சோனி நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்படாததால் மார்வெல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
 
மார்வெல் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் இனி வெளியாவதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
 
இதை தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com