முகப்புஹாலிவுட்

93rd Oscars : அகாடமி விருது விதிகளில் மாற்றம்..!

  | May 04, 2020 17:09 IST
93rd Oscars

"சவுண்டு மிக்ஸிங் மற்றும் சவுண்டு எடிட்டிங் விருதுகள் இனி ‘பெஸ்ட் சவுண்டு’ என்று ஒரே வகையாக இணைக்கப்படும்”

மதிப்புமிக்க விருது வழங்கும் விழாக்களில் ஒன்றான Academy of Motion Picture Arts and Science நடத்தும் ஆஸ்கர் விருது சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. ஒரு அறிக்கையின்படி, ஸ்ட்ரீமிங் சேவைகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும், இருப்பினும், 93 வது ஆஸ்கார் விருதுகளுக்கு மட்டுமே! எனக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 94-வது அகாடமி விருதுகளுக்கு DVD ஸ்கிரீனர்களை தடை செய்வதோடு, இரண்டு ஒலி வகைகளையும் (Sound Mixing and Sound Editing) ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அகாடமி தெரிவித்துள்ளது.

அகாடமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் “ஆஸ்கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த ஆண்டிற்கு மட்டுமே, ஸ்ட்ரீம் செய்யப்பட்ட படங்கள் சிறந்த படத்திற்கான விருதுகளுக்கு தகுதி பெறும். மேலும், சவுண்டு மிக்ஸிங் மற்றும் சவுண்டு எடிட்டிங் விருதுகள் இனி ‘பெஸ்ட் சவுண்டு' என்று ஒரே வகையாக இணைக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com